உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூந்தமல்லி பள்ளி மைதானத்தில் குட்டைபோல் மழைநீர் தேக்கம்

பூந்தமல்லி பள்ளி மைதானத்தில் குட்டைபோல் மழைநீர் தேக்கம்

பூந்தமல்லி, பூந்தமல்லியில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.இப்பள்ளி மைதானத்தில், மாணவர்கள் தினமும்கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழை பெய்தால், மைதானத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர்வடிய வழியும் இல்லாததால், பல நாட்களாக தேங்கி, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. சுகாதார சீர்கேடு நிலவுவதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.இதனால் மாணவர்கள், மைதானத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பள்ளி வளாகத்தில் மழைநீர் வெளியேற, உரிய கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ