மேலும் செய்திகள்
பனச்சியம்மன் கோவில் குளத்தில் துாய்மை பணி
02-Sep-2024
நங்கநல்லுார், சென்னை, நங்கநல்லுார், டீச்சர்ஸ் காலனி, முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 47. இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று காலை யமஹா பேஷன் பைக்கில், நங்கநல்லுாரில் உள்ள தனியார் பள்ளியில் மகளை விட்டுவிட்டு வீடு திரும்பினார்.அப்போது, எம்.ஜி.ஆர்., சாலை, ரகுபதி, ஒன்பதாவது தெரு சந்திப்பில், பின்புறம் வேகமாக வந்த டாடா ஏஸ் மினி வேன், கார்த்திகேயன் பைக் மீது வேகமாக மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது வேன் ஏறி இறங்கியது.பலத்த காயமடைந்த கார்த்திகேயனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாயிலாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, தப்பி சென்ற வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
02-Sep-2024