உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதுவண்ணை கொலை வழக்கு தப்பிய ரவுடிக்கு மாவுக்கட்டு

புதுவண்ணை கொலை வழக்கு தப்பிய ரவுடிக்கு மாவுக்கட்டு

ராயபுரம், திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் லோகேஷ், 32. ரவுடியாக வலம் வந்த இவர் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.இவர், கடந்த 11ம் தேதி, தண்டையார்பேட்டை, பாலகிருஷ்ணா தெருவில் நண்பர்களுடன்சேர்ந்து மது அருந்தினார்.

போதை தகராறு

அப்போது, போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்த போலீசார் ஆறு பேரை கைது செய்தனர்.விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 'மண்டை' பிரகாஷ், 38, பிரகாஷ்ராஜ், 25, தண்டபாணி, 30, மதன், 42, சுரேந்தர், 32, மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திக், 34, என்பது தெரிந்தது.விசாரணையின்போது 'மண்டை' பிரகாஷ் போலீசாரிடம் இருந்து தப்ப, வைத்தியநாதன் மேம்பாலத்தில் ஏற முயன்றார். அப்போது, கால் இடறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்து, கையில் 'மாவுக்கட்டு' போட்டனர்.போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது:கொல்லப்பட்ட லோகேஷ், 'கானாங்கத்த' ராஜ், 'மண்டை' பிரகாஷ் ஆகியோர் நண்பர்கள். மூவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கடந்த 11ம் தேதி மதியம் மூவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில், கானாங்கத்த ராஜை, மண்டை பிரகாஷ் அடித்துள்ளார். அப்போது, லோகேஷ், மண்டை பிரகாஷை தாக்கி அவரை அசிங்கமாக கிண்டல் செய்து உள்ளார்.

ஆத்திரம்

தன்னை விட வயது குறைவாக உள்ள லோகேஷ், தன்னை அடித்தது பிரகாஷுக்கு அசிங்கமானது. இதனால், ஆத்திரமடைந்தவர், கூட்டாளிகளை வைத்து, அன்று மாலையே அவரை தீர்த்துக்கட்டியுள்ளார்.கொல்லப்பட்ட லோகேஷ், சிறையில் உள்ள பிரபல ரவுடிகளான ஈசா என்கிற ஈஸ்வரன், எலி யுவராஜின் கூட்டாளி.இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை