மீண்டும் நிழற்பந்தல் அமைச்சர் உறுதி
சென்னை,'சென்னையின் பிரதான சாலை சிக்னல்களில், மீண்டும் நிழற்பந்தல் அமைக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வெயில் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்க, சாலை சிக்னல்களில் மாநகராட்சி சார்பில், பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டது.இந்தாண்டும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.குட்கா, புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தி வருகிறோம். விற்பனை செய்யப்படும் கடைகளை கண்டறிந்து 'சீல்' வைக்கப்படுவதுடன், அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.