மேலும் செய்திகள்
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
05-Oct-2025
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
05-Oct-2025
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
05-Oct-2025
புளியந்தோப்பு, சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்தில் புளியந்தோப்பு, பட்டாளம், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து அனுப்புவதற்கு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் கழிவு நீரேற்று நிலையம் உள்ளது. அங்கிருந்து புரசைவாக்கம் கழிவுநீரிறைக்கும் நிலையத்திற்கு பாய்கிறது.'வியாசர்பாடி, ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதை மேம்பால கட்டுமான பணிக்காக, நேற்றும், நேற்று முன்தினமும் புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது' என, குடிநீர் வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கு சேவை எண்ணும் வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில், நேற்று காலை பகிங்ஹாம் கால்வாயில் இருந்தும், வடிகால் மூடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 'குபுகுபு'வென கழிவுநீர் வெளியேறியது. திடீரென வெளியேறிய கழிவுநீர், 77வது வார்டுக்குட்பட்ட முனுசாமி தெரு, ருத்ரப்பா தெரு, அய்யாவு தெரு, கே.எம்.கார்டன், அங்காளம்மன் தெரு உள்ளிட்ட குடியிருப்புகளை சூழ்ந்தது. பட்டாளம், ஆஞ்சநேயர் கோவில் உள்ளேயும் கழிவுநீர் புகுந்தது.இதனால், புளியந்தோப்பு பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட தெருக்கள் கழிவு நீர் தேங்கி தீவு போன்று காட்சியளித்தது. மழைநீர் தேங்கி நிற்பதுபோல கழிவுநீர் வீடுகளை சுற்றி தேங்கி, அப்பகுதி கடும் துார்நாற்றம் வீசியதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து தடைஇதனால், வீடுகளில் இருந்து மக்கள் வெளியேவரவும் முடியவில்லை. உள்ளேயும் செல்லவும் முடியாத அவலநிலை ஏற்பட்டது. கால் முட்டியளவிற்கு கழிவு நீர் தேங்கியதால், அசம்பாவிதங்கள் ஏதும் நேராதபடி, பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தடைபட்டது. பட்டாளம் சந்திப்பில் இருந்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.கழிவு நீர் முற்றிலும் அகற்றி, தொற்று நோய் பரவாதபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.புளியந்தோப்பிற்கு, இது முதல் முறை அல்ல, கடந்தாண்டு ஆக., 4ம் தேதி கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷனில் உள்ள பிரதான குழாய் உடைந்து, புளியந்தோப்பில் 50க்கும் மேற்பட்ட பகுதிகள் பாதிப்பிற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புளியந்தோப்பில் நடந்து வரும் மேம்பாலப்பணிக்காக, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி, நேற்று நிறுத்தி வைக்கப்பட்டன. மாலைக்குள் அனைத்தையும் சரிசெய்து மோட்டாரை இயக்கியுள்ளோம். இரவுக்குள் நிலைமை சீராகி விடும். இதுபோன்ற பிரச்னை மீண்டும் எழக்கூடாது என்பதற்காகவே, தற்போதைய பராமரிப்பு பணி நடந்து வருகிறது.சாலமன் ஜெயசீலன்,குடிநீர் வாரிய அதிகாரி,திரு.வி.க.நகர்.பராமரிப்பு பணியின் காரணமாகவே, இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இரவே சீராகி விடும். அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்று பாதிப்புகளை ஆராய்ந்து, தேவைப்பட்டால் அதற்கேற்ப மருத்துவ முகாமும் நடத்தப்படும். ராதாகிருஷ்ணன்,கமிஷனர் சென்னை மாநகராட்சிஎங்களை மாநகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வரவிடுவதே இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே, நீங்கள் பகுதிக்குள் வரவேண்டாம் என்கின்றனர். பிரச்னைக்கான தீர்வை குடிநீர் வாரிய அதிகாரிகள் எடுத்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சுமதி, கவுன்சிலர் 77வது வார்டு.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025