| ADDED : ஜூலை 31, 2024 01:08 AM
சென்னை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பெரிய அளவில் கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வரும் காசா கிராண்ட் நிறுவனம், சென்னை, பெரும்பாக்கத்தில் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற, கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த வளாகத்தில், தேசிய கல்வி கொள்கை மற்றும் அது சார்ந்த சமீபத்திய நிகழ்வுகள் குறித்த மாநாடு, ஜூலை 26ல் துவங்கி 28 வரை, மூன்று நாள் நடந்தது. இதில், 33 பள்ளிகளை சேர்ந்த, 650க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.'மாணவர்கள் அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபடவும், பல்வேறு தலைப்புகளில் தங்கள் திறனை வெளிப்படுத்தவும் மாநாடு உதவியது' என, காசா கிராண்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல் முதன்மை இயக்க அதிகாரி பி. துவாரகேஷ் தெரிவித்தார். சர்வதேச இந்திய இயக்கத்துக்காக நாடுகளை ஒருங்கிணைக்கும், ஐ.ஐ.எம்.யு.என்., அமைப்பின், 13வது பதிப்பாக இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.