மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
23 hour(s) ago | 1
தண்டையார்பேட்டை:கொருக்குப்பேட்டை, கார்னேசன் நகரைச் சேர்ந்தவர் மாரியம்மாள்; கூலித்தொழிலாளி. இவரது மகன் வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு முடித்து, 12ம் வகுப்பிற்கு செல்ல உள்ளார்.நேற்று முன்தினம், கல்விக் கட்டணம் செலுத்த, மகனுடன் பள்ளிக்கு சென்றார். அப்போது, பள்ளி நுழைவாயிலில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர்,'பள்ளியில் பணம் செலுத்தும் கவுன்டர் மூடப்பட்டதாக மாரியம்மாளிடம் கூறியுள்ளார். மேலும், தான் வங்கி வாயிலாக பள்ளிக் கட்டணம் செலுத்த செல்வதால், அவரது மகனை உடன் அனுப்பினால் உதவுவதாக கூறியுள்ளார்.இதை நம்பிய மாரியம்மாள், 23,500 ரூபாயை அந்த நபரிடம் கொடுத்து, தன் மகனை உடன் அனுப்பியுள்ளார். அருகிலுள்ள வங்கிக்கு சென்ற அந்த மர்ம நபர், வங்கிக் கணக்கு புத்தகத்தின் 'ஜெராக்ஸ்' எடுத்து வருமாறு, மாணவரை வீட்டிற்கு அனுப்பிஉள்ளார். பின், பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மாரியம்மாள் நேற்று, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
23 hour(s) ago | 1