உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூடுதலாக 28 ரயில்கள் வாங்க நிடி ஆயோக் ஒப்புதல்

கூடுதலாக 28 ரயில்கள் வாங்க நிடி ஆயோக் ஒப்புதல்

சென்னை, சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரத்துக்கு, தலா நான்கு பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் தினமும் 2.70 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். நெரிசல் மிகுந்த நேரங்களிலும், வார இறுதி நாள்களிலும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரு வழித்தடங்களிலும், பயணியர் வசதிக்காக ஆறு பெட்டிகள் உடைய மெட்ரோ ரயில்கள் கொள்முதல் செய்து இயக்க திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, இது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கருத்துரு அனுப்பியது. இதற்கு தமிழக அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இதன்படி, மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்தில் 2028ல் உத்தேச பயணியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கீட்டு, 2,820.90 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் படி, 28 கூடுதல் மெட்ரோ ரயில்களை வாங்க, நிடி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு, மத்திய பொருளாதார விவகாரத்துறை மற்றும் நிதித்துறை, ஒப்புதல் பெறப்பட்டு, நிதியுதவி திட்டம் வெளியிடப்படும். இந்த மெட்ரோ ரயில்களை தயாரித்து பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.Muthuraj
ஜூன் 14, 2024 13:47

உன்னுடைய கண்ணை நல்லா திறந்து பாருய்யா. எல்லா மாநில மெட்ரோவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு கட்டுப்பட்டவை


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 14, 2024 10:00

சாதாரண ரயில்களை இயக்காமல் மெட்ரோ ரயில்களை விட்டு தமிழனை கொள்ளையடிக்கலாம் என்பது பிஜேபிக்கு தெரிந்திருக்கிறது.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி