உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணியின்போது தவறி விழுந்து பெயின்டர் பலி

பணியின்போது தவறி விழுந்து பெயின்டர் பலி

அயனாவரம், கொளத்துார், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 55; பெயின்டர். அயனாவரம், கே.எச்., சாலையிலுள்ள ருத்ரன் தனியார் மருத்துவமனையில், பெயின்டிங் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.நேற்று முன்தினம் மாலை, வெளிப்புற சுவரில் கட்டப்பட்டிருந்த பலகையில் அமர்ந்தபடி பெயின்ட் அடித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பலகை நழுவியதால், 15 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அதே மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்