உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவன் இறந்த வீட்டில் தொடரும் வெடி சத்தத்தால் பீதி

மாணவன் இறந்த வீட்டில் தொடரும் வெடி சத்தத்தால் பீதி

கொளத்துார், கொளத்துார், ஜி.கே.எம்., காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது மகன் ஆதித்ய பிரணவ், 17; பிளஸ் 2 மாணவர். வேதியியலில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த 21ம் தேதி வீட்டில் வேதிப்பொருட்கள் வைத்து ஆய்வில் ஈடுபட்ட போது, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், அவரது வீடு மற்றும் சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டது. ராஜமங்கலம் போலீசார் விசாரித்தனர். ஆதித்ய பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது, கை துண்டாகி இரு வீடுகளை தாண்டி ஒரு வீட்டின் மாடியில் விழுந்தது.இந்த நிலையில், அந்த வீட்டில் இருந்து, நேற்று மதியம் மீண்டும் பெரிய வெடிச் சத்தம் கேட்டது. இதனால் அக்கம்பக்கத்தினர் பீதியடைந்தனர். இதையடுத்து, பகுதிவாசிகளின் பீதியை அகற்றும் வகையில், நேற்று இரவு வீடு முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ