உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில்கள் ரத்து பயணியர் அவதி

ரயில்கள் ரத்து பயணியர் அவதி

சென்னை, தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதால், ஆக., 14 வரை விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் பெரிய அளவில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் என்பது முக்கியமானது. இந்த தடத்தில், மின்சார ரயில்கள் மட்டுமின்றி விரைவு ரயில்களும் ரத்து செய்தும், மாற்றம் செய்தும் இயக்கப்படுகின்றன.வெளியூரில் இருந்து சென்னைக்கு வருவோரும், இங்கிருந்து வெளியூருக்கு செல்வோரும் கடுமையாக அவதிப்படுகின்றனர். வரும் 14ம் தேதிக்கு பிறகாவது, வழக்கமான ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், மேலும் சில நாட்களுக்கு ரயில்கள் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் பணியாளர்களை நியமித்து, பணிகளை விரைந்து முடிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தாம்பரம் ரயில்வே யார்டில் இரவு பகலுமாக பணி வேகமாக நடக்கிறது. கட்டுமானம், சிக்னல் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து பணிகள் நடப்பதால், தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. பணிகள் விரைந்து முடிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ