UPDATED : மார் 22, 2024 12:10 PM | ADDED : மார் 22, 2024 12:10 AM
சென்னை,பவித் சிங் நாயர் 'டி - 20' கிரிக்கெட் போட்டியில், பெண்களில் எத்திராஜ் மற்றும் குருநானக் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.வேளச்சேரி, குருநானக் கல்லுாரி சார்பில், 10ம் ஆண்டு பவித் சிங் நாயர் நினைவு கோப்பைக்கான, அகில இந்திய 'டி - 20' கிரிக்கெட் போட்டிகள், சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.இதில் ஆண்களில் 16, பெண்களில் 10 என, மொத்தம் 26 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று நடந்த பெண்களுக்கான,'லீக்' சுற்றில், எத்திராஜ் மற்றும் ஸ்ரீ ராமக்கிருஷ்ணா கல்லுாரி அணியை, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.மற்றொரு போட்டியில் குருநானக் அணி, 181 ரன்கள் வித்தியாசத்தில், ஜெபாஸ் கல்லுாரியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.