உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிளஸ் 2 மாணவர் விபத்தில் உயிரிழப்பு

பிளஸ் 2 மாணவர் விபத்தில் உயிரிழப்பு

வடபழநி, நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் சுகநேஷ்வர், 17; பிளஸ் 2 மாணவர். இவர், நேற்று முன்தினம் இரவு, வடபழநியில் உள்ள நண்பர் நித்திஷின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, தாயின் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் சென்றார்.வடபழநி மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றபோது, முன்னால் சென்ற ரெடிமிக்ஸ் லாரியில், ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது.இதில் படுகாயமடைந்த மாணவனை, அவ்வழியாக காரில் சென்ற ஜாபர் சாதிக் என்பவர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது. விபத்து குறித்து, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை