வண்ணாரப்பேட்டை,பழைய வண்ணாரப்பேட்டை, ஜே.பி.கோவில் தெருவில் செருப்பு கடை வைத்துள்ளவர் உசேன், 42. கடை ஊழியர் யாசர் அசார்பெத், 36. நேற்று முன்தினம் கடைக்குள் புகுந்த ஆறு பேர் போதை கும்பல், 'ஓசி' செருப்பு கேட்டுள்ளனர். உசேன் தரமறுத்ததால், இருவரையும் வெட்டி அந்த கும்பல் சென்றது.தொடர்ந்து, பழைய வண்ணாரப்பேட்டை, ராமானுஜர் தெருவில் உள்ள பஷீர்அகமது, 42, என்பவரின் உணவகத்தில் புகுந்தது. 'ஓசி' உணவு மற்றும் மாமூல் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், அவரையும் வெட்டி தப்பியது. வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.இதில், ராயபுரம், ஆனந்த முருகன், 19, நவீன்குமார், 19; பழைய வண்ணாரப்பேட்டை மதன், 19, பழைய வண்ணாரப்பேட்டைதரணி லோகேஷ், 21, சூர்யா, 19, சந்தோஷ்குமார், 19, ஆகிய ஆறு பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதில், ஆனந்தமுருகன் பழைய குற்றவாளி ஆவார். பின், ஆறு பேரையும் போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.