உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டைட்டேனிய மார்பெலும்பு புற்றுநோயாளிக்கு மறுவாழ்வு

டைட்டேனிய மார்பெலும்பு புற்றுநோயாளிக்கு மறுவாழ்வு

சென்னை,அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப் பட்ட நோயாளிக்கு, '3டி' தொழில்நுட்ப உதவியுடன், டைட் டேனியம் எலும்பை பயன்படுத்தி, மார்பெலும்பை பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மெரிடியன் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கென்னி ராபர்ட் ஜே கூறியதாவது:'காண்ட்ரோசர் கோமா' என்பது, குறுத்தெலும்பு செல்களில் உருவாகும், ஒரு அரிய வகை புற்றுநோய். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வகை புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாது. இவை பரவக்கூடிய தன்மை குறைவாக இருந்தாலும், வீரியம் அதிகமாக இருக்கும். நுரையீரல் மற்றும்உடலின் பிற பகுதிகளுக்கு பரவக்கூடியது. எனவே, நோயாளிக்கு பாதிக்கப்பட்ட எலும்பு பகுதிகளை அகற்ற வேண்டியது அவசியம். மார்பு பகுதியில் பாதிப்பு என்பதால், பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. எனவே, புற்றுநோய் பாதித்த எலும்புகள் அகற்றப்பட்டு, '3டி' தொழில்நுட்ப உதவியுடன், டைட்டேனியத்தால் தயாரிக்கப்பட்ட, செயற்கை மார்பெலும்புகள் பொருத்தப்பட்டன. இந்த அறுவை சிகிச்சைக்குப்பின், நோயாளியால் சுவாசிக்கவும், தன் இயல்பான வேலைகளையும் செய்ய முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை