மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பால் கண்மாயில் நீர் தேக்குவதில் சிரமம்
15-Aug-2024
சோழிங்கநல்லுார்,திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, பகிங்ஹாம் கால்வாய் 15 கி.மீ., நீளம் உடையது. இடத்தை பொறுத்து, 150 முதல் 600 அடி வரை அகலம் உள்ளது.கால்வாயில் நீரோட்டம் சீராக இருந்தால் தான், குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பு தடுக்கப்படும்.ஆனால், கால்வாயில் 2 கி.மீ., துாரத்தில் ஆகாயத்தாமரை படர்ந்திருந்தது. இதோடு, குப்பையும் சேர்ந்ததால், நீரோட்டத்திற்கு தடை ஏற்பட்டது.குறிப்பாக, நீலாங்கரை, வெட்டுவாங்ேகணி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, உத்தண்டி பகுதியில் அடர்த்தியாக ஆகாயத்தாமரை படர்ந்திருந்தன.இதனால், நீரோட்டத்தின் தடை அதிகரித்தது. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, நவீன இயந்திரங்கள் கொண்டு ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவங்கியது. இதனால், வரும் மழைக்காலத்தில் நீரோட்டத்திற்கு தடை ஏற்படாது என, அதிகாரிகள் கூறினர்.
15-Aug-2024