உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை:மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் மட்டுமின்றி, கட்டுமான பொருட்களையும் மாநகராட்சியினர் அகற்றினர்.தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கோடம்பாக்கத்தில், மாம்பலம் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையை ஆக்கிரமித்து காய்கறி, பூ, பழக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும் கட்டுமானப் பொருட்களும், சாலையில் ஆங்காங்கே ஆக்கிரமித்து குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனால், தினசரி இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து வாகன ஓட்டிகள், தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தனர்.புகாரின்படி நேற்று, நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் மட்டுமின்றி, ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்களையும், மாநகராட்சியினர் அகற்றினர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி வித்யா கூறுகையில்,''இரண்டு நாட்களுக்கு முன், தி.மு.க., - அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இரண்டு ஆக்கிரமிப்பாளர்களும், மண்டல அலுவலகத்திற்கு வந்து பிரச்னை செய்தனர்.ஆனாலும், மண்டல அதிகாரி பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ibrahim Ali A
ஜூலை 24, 2024 14:57

நீங்கள் செய்வது மிகவும் நல்ல ஒரு வேலை இந்த ஆக்கரம் இப்ப எடுக்க விட்டால் சென்னை சபித்து போகும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி


Ethiraj
ஜூலை 22, 2024 10:48

Entire stretch of high rise shopping complex in panagal park pondy bazar learn to be unauthorised constructions. Several times supreme court advised TN govt to demolish all of them. No one takes action everyone knows what is the reason


Jebamani Mohanraj
ஜூலை 21, 2024 09:53

நீதிமன்றம் உத்திரவிட்டாலும் சாலை, பூங்கா, குளம் ஆக்ரமிப்புகளை அகற்றாத மாநகராட்சி பூ காய் கனி விற்கும் ஏழைகளின் மீது தங்கள் வீரத்தை காட்டுகிறது


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி