உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காந்தி மண்டப வளாகத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

காந்தி மண்டப வளாகத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகம், போதிய பராமரிப்பின்றி செடிகள் கருகியும், குப்பை மயமாகவும் காட்சியளித்தது. இது தொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, குடிநீர் வசதி ஏற்படுத்துதல், நடைபாதை சீரமைத்தல் உட்பட, பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.இது குறித்து செய்தித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:கிண்டியில் அமைந்துள்ள, காந்தி மண்டப வளாகம், 18.42 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தேசத் தலைவர்களின் நினைவிடங்கள், சிலைகள் நிறுவப்பட்டு பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வளாகத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியை நேற்று முன்தினம் செய்தித்துறை அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.அதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் தவிர, கூடுதலாக குடிநீர் வசதி, புல்வெளி மற்றும் பூங்கா பராமரிப்பு, நுழைவாயில் மற்றும் பெயர் பலகைகள் சீரமைப்பு, புதிய மின் கோபுர விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ