உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 100 நாள் பணியாளர்களை துாய்மை பணியில் ஈடுபடுத்த கோரிக்கை

100 நாள் பணியாளர்களை துாய்மை பணியில் ஈடுபடுத்த கோரிக்கை

பெரும்பாக்கம்:பெரும்பாக்கம் ஊராட்சியில், தூய்மை பணிகளை மேற்கொள்ளும் ஆட்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, 100 நாள் ஊழியர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி, 831.96 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இங்கு, 12 வார்டுகள் உள்ளன. இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.மிகப்பெரிய பரப்பளவையும், ஒரு சட்டசபை தொகுதிக்கு இனையான மக்கள் தொகை உடைய பெரும்பாக்கம் ஊராட்சியில், 64 பேர் மட்டுமே தூய்மை பணி உள்ளிட்ட வேலைகளை செய்கின்றனர்.இதனால், வார்டுகள் தோறும் உள்ள தெருக்களில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை அகற்றவும், வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கவும் போதுமான நேரம் கிடைப்பதில்லை. மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த ஊராட்சிக்கு, குறைந்த பட்சம் 200 தூய்மை பணியாளர்களை நியமித்தால் மட்டுமே பெரும்பாக்கம் ஊராட்சி சுகாதாரத்தில் மேம்படும்.எனவே, இப்பகுதியில், 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஊழியர்களையும், எங்களோடு தூய்மை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்