உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்நடைகள் கணக்கெடுப்பு மக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

கால்நடைகள் கணக்கெடுப்பு மக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

சென்னை:கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சென்னையில், 21வது கால்நடைகள் கணக்கெடுப்பு பணி, 2024 அக்டோபரில் துவங்கியது. கணக்கெடுப்பை இந்தாண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.இதுவரை, 20.65 லட்சம் வீடுகளில் நடந்த கணக்கெடுப்பில், 15.93 லட்சம் கால்நடைகள் உள்ளது தெரிய வந்துள்ளது.கணக்கெடுப்புக்கான செயலியில், நெட்வொர்க் பிரச்னை ஏற்படுவதால், குறிப்பிட்ட அவகாசத்துக்குள் கால்நடைகளை கணக்கெடுக்க முடியவில்லை. இன்னும், 4.72 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு நடத்த வேண்டியுள்ளது.மேற்கு மாம்பலம், தி.நகர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கணக்கெடுப்பு நடந்தது. இந்த பணிகளை, கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பு கூடுதல் இயக்குனர் நவநீத கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.பின், நவநீதி கிருஷ்ணன் கூறுகையில், ''சென்னையில், கால்நடைகள் கணக்கெடுப்பு பணி, 75 சதவீதம் முடிந்துள்ளது. மீத கணக்கெடுப்பை முடிக்கும் வகையில், இம்மாத இறுதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கால்நடை வளர்ப்போர், கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.அப்போது, மாவட்ட கால்நடை கணக்கெடுப்பு பணி ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன், தலைமை டாக்டர் நவமணி உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை