உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓராண்டில் 123 மனுக்களுக்கு தீர்வு

ஓராண்டில் 123 மனுக்களுக்கு தீர்வு

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை பொதுமக்கள் மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்களை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேரில் சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார். மூத்தகுடிமகன்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட துணை கமிஷனரை அவரது வீட்டிற்கே சென்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.நடப்பாண்டில் இதுவரை, 193 புகார்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. அவற்றில், 123 மனுக்களுக்கு போலீசார் தீர்வு கண்டுள்ளனர். மீதமுள்ள, 70 மனுக்களுக்கு உரிய தீர்வு காணும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.'பந்தம்' திட்டத்தின் உதவி எண், 9499957575 வாயிலாக கோரும் மூத்த குடிமக்களுக்கு உடனடியாக உதவி செய்யப்பட்டு வருகிறது.காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூன் 06, 2024 13:37

ஐந்து மாதம் அதாவது நூற்று ஐம்பது நாட்களில் நூற்று இருபத்தி மூன்று மனுக்களை தீர்வா? அடேங்கப்பா மிகப்பெரிய சாதனைதான். கின்னஸுக்கு எழுதிப்போடவும்.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி