உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழி தீர்க்கும் முயற்சி முறியடிப்பு 2 வாலிபர்களிடம் விசாரணை

பழி தீர்க்கும் முயற்சி முறியடிப்பு 2 வாலிபர்களிடம் விசாரணை

சென்னை, முண்டகக்கண்ணியம்மன் கோவில் சாமி ஊர்வலத்தில் பழி வாங்கும் நோக்கத்தில் கத்தியுடன் வந்த வாலிபர்கள் இருவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.ராயப்பேட்டை, வி.எம்.தெருவில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது ராயப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 19, சரவணன், 18 ஆகிய இருவரும் நடனமாடிக் கொண்டிருந்தபோது, பார்த்தசாரதி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரையும் பார்த்தசாரதி அடித்துள்ளார். மீண்டும் திரும்பி வந்த இருவரையும், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்துள்ளனர். சோதனையில், அவர்கள் இடுப்பில் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தங்களை தாக்கிய பார்த்தசாரதியை பழி தீர்க்கும் நோக்கில், கத்தியை எடுத்து வந்தது தெரியவந்தது.இருவரையும் பிடித்து ராயப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை