நடைபாதை வியாபாரியிடம் ரூ.84,800 நுாதன ஆட்டை
கொடுங்கையூர், சென்னை, பூங்கா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 62. இவர், நடைபாதையில் மொபைல் போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில் உள்ள, இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,மில், பணம் எடுக்க முயன்றுள்ளார்.இதற்கு அங்கிருந்த 40 வயது மதிக்கத்தக்க நபரிடம் உதவி கேட்டார். அவர் உதவுவது போல் நடித்து, ஏ.டி.எம்., கார்டை வாங்கிக் கொண்டார். பின், வேறோரு ஏ.டி.எம்., கார்டு கொடுத்து சென்றுள்ளார்.இந்த நிலையில், முதியவரின் ஏ.டி.எம்., கார்டு வழியாக, 40,000 ரூபாய் பணமாகவும், நகைக்கடை ஒன்றில் நகை வாங்கியதற்காக, 44,800 ரூபாய் பணமும் செலுத்தப்பட்டுள்ளது என, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. புகாரின்படி கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.