உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி 23வது பட்டமளிப்பு விழா

எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி 23வது பட்டமளிப்பு விழா

சென்னை,திருவேற்காடில் உள்ள எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரியில், 23வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி தலைவர் துரைசாமி தலைமையில் நடந்தது.இதில், சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான பாலகுருசாமி, பல்கலை அளவில் ரேங்க் எடுத்த 56 மாணவர்களுக்கு, ரொக்கப்பரிசு மற்றும் பட்டங்கள் வழங்கி பாராட்டினார்.பின், பாலகுருசாமி பேசியதாவது:நீங்கள் பட்டதாரியாக காரணமான பெற்றோருக்கும், கல்லுாரிக்கும் நன்றியுடன் இருக்க வேண்டும். பணம் மட்டுமே வெற்றி தராது; வேலையை ரசித்து செய்பவரே வெற்றி பெறுகிறார். நோக்கத்தை வரையறுத்து சரியாக திட்டமிட்டு, விடாமுயற்சியுடனும் நேர்மையுடனும் இலக்கை அடைய வேண்டும். அதேநேரம் சமூகத்துக்கும், நாட்டுக்கும் உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ