உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒப்பந்த ஊழியர்களுக்கு 5ம் தேதிக்குள் ஊதியம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு 5ம் தேதிக்குள் ஊதியம்

சென்னை, 'மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு, இனி மாதம் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகராட்சியில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார பணி மற்றும் ஒப்பந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு, மாத ஊதியம் மிகவும் தாமதமாக கிடைக்கிறது.இதுகுறித்து, மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில், கவுன்சிலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.இதைத்தொடர்ந்து, 'ஒருங்கிணைந்த வங்கி கணக்கில் மாதந்தோறும், 5ம் தேதி வேலை நாளில், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டு உள்ளார்.உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாது: முக அங்கீகார முறைமையை பயன்படுத்தி, 1ம் தேதி முதல் 30 அல்லது 31ம் தேதி வரை வருகைப்பதிவு கணக்கிடப்பட வேண்டும். இந்த வருகைப்பதிவு, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில், நிர்வாக அலுவலரால் உறுதி செய்யப்பட வேண்டும்.அதன்படி, ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கி, பணியாளர்களின் நலனை காக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை