உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அனுமதியின்றி இயங்கிய பொருட்காட்சி திடலுக்கு சீல்

அனுமதியின்றி இயங்கிய பொருட்காட்சி திடலுக்கு சீல்

பல்லாவரம், பல்லாவரம் - குன்றத்துார் சாலை, பல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில், தனியார் நிறுவனம் சார்பில், மூன்று நாட்களாக, ராட்டினம் மற்றும் அதனுடன் கூடிய பொருட்காட்சிப் பூங்கா செயல்பட்டு வந்தது.இதற்கு கட்டணம் வசூலித்து, பொதுமக்களை, அந்த தனியார் நிறுவனம் அனுமதித்து வந்தது. தற்போது, பள்ளி கோடை விடுமுறை என்பதால், பொதுமக்கள் அதிகளவில் பொருட்காட்சி பூங்காவிற்கு குடும்பத்தினருடன் சென்று வந்தனர். இந்த நிலையில், பொருட்காட்சி பூங்காவில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படவில்லை எனவும், மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறவில்லை எனவும் புகார் எழுந்தது.இதையடுத்து, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த் துறையினர், நேற்று காலை, பொருட்காட்சி நடக்கும் இடத்தை ஆய்வு செய்து, 'சீல்' வைத்தனர்.தாசில்தார் கூறுகையில், ''பொருட்காட்சி நடத்த, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறவில்லை. தீயணைப்பு கருவிகள் இல்லாதது, ராட்டினம் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கான மின் இணைப்பில் பாதுகாப்பு நடவடிக்கையை கடைபிடிக்காததால், பொருட்காட்சி திடலுக்கு சீல் வைக்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி