உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆறாக பாயும் கழிவுநீர் பிரதான சாலை சேதம்

ஆறாக பாயும் கழிவுநீர் பிரதான சாலை சேதம்

ஆவடி:ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு பட்டாபிராம், தண்டரை பள்ளத்தெரு அருகே, மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலை ஏற்கனவே, ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.இந்நிலையில், பட்டாபிராம் -- பூந்தமல்லி பிரதான சாலையை ஒட்டியுள்ள இந்த பகுதியில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பிரதான சாலையில் வழிந்து ஓடுகிறது.இதனால், பிரதான சாலை சேதமடைந்து, அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட கவுன்சிலர் கண்டுகொள்ளாத நிலையில், கழிவுநீர் வெளியேறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், கழிவுநீரை அத்துமீறி வெளியேற்றி சாலையை சேதப்படுத்திய வீடுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி