உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டாக்டர்கள், நர்ஸ் பற்றாக்குறை கர்ப்பிணியர் அலைக்கழிப்பு

டாக்டர்கள், நர்ஸ் பற்றாக்குறை கர்ப்பிணியர் அலைக்கழிப்பு

கண்ணகி நகர், கண்ணகி நகரில் 24 மணி நேரமும் செயல்படும், 30 படுக்கை வசதி உடைய பொது மற்றும் மகப்பேறு மருத்துவமனை, 70 லட்சம் ரூபாய் செலவில், 2019ல் திறக்கப்பட்டது.ஆனால், உபகரணங்கள் இல்லாமல் திறந்ததால், 2020ல் தான் முழு பயன்பாட்டுக்கு வந்தது. 'ஸ்கேன், எக்ஸ்ரே' மற்றும் ரத்த பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.தினமும் 400க்கும் மேற்பட்டோர் பொது சிகிச்சைக்கு செல்கின்றனர். மாதத்திற்கு 30க்கும் மேற்பட்ட குழந்தை பிறப்பு நடக்கிறது.இதில், 25 சுக பிரசவம், 5 அறுவை சிகிச்சை நடக்கிறது. சில மாதங்களாக, டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததால், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.நோயாளிகள் கூறியதாவது:கண்ணகி நகர் மருத்துவமனையில், ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். இவர், காலை 8:00 முதல் 3:00 மணி வரை இருப்பார். மாலை 3:00 முதல் மறுநாள் காலை 8:00 மணி வரை, வார்டுகளில் உள்ள நகர்புற நலவாழ்வு மையத்தில் உள்ள டாக்டர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.பல நாட்களாக அவர்களும் பணிக்கு வராததால், செவிலியர்களே சிகிச்சை அளிக்கின்றனர். கர்ப்பிணியருக்கு தினமும் மகப்பேறு சிகிச்சை, ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. சில மாதங்களாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் அடையாறில் இருந்து டாக்டர் வருகிறார். மீதமுள்ள நாட்களில் சிகிச்சை தேவைப்பட்டால், திருவல்லிக்கேணி மருத்துவமனை செல்ல வலியுறுத்துகின்றனர்.அதேபோல், ஆறு செவிலியர்கள் உள்ளனர். இதில், மூன்று பேர் தற்காலிக ஊழியர்கள். மொத்த மருத்துவமனை நிர்வாகத்தை கவனிக்க முடியாமல், செவிலியர்கள் சிரமப்படுகின்றனர்.சென்னை மாநகராட்சி எல்லையான ஓ.எம்.ஆரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையாக உள்ளதால், டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை