உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூவருக்கு அரிவாள் வெட்டு ஐந்து பேருக்கு காப்பு

மூவருக்கு அரிவாள் வெட்டு ஐந்து பேருக்கு காப்பு

கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, சாஸ்திரி நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 24; 'பைக்' மெக்கானிக். இவர், தொப்பை விநாயகர் கோவில் தெருவில் வைத்துள்ள மெக்கானிக் கடையில், அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார், 21, வினோத்குமார், 30, வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை கடைக்கு, மூன்று பைக்கில் வந்த ஆறு பேர், 'பிரேக்'கை சரி செய்துகொண்டு, பணம் தராமல் தகராறு செய்துள்ளனர்.திடீரென, மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டன், நவீன்குமார், வினோத்குமார் ஆகிய மூவரையும், சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.காயமடைந்த மூவரும், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர்.இதில் தொடர்புடைய தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த வெற்றிவேல், 19, பிரவீன் குமார், 19, பிரகாஷ், 19, குணசேகரன், 19, விக்ரம், 20, ஆகிய ஐவரை நேற்று மாலை கைது செய்தனர்.விசாரணையில், கடந்த 26ம் தேதி, நேதாஜி நகரில் கோவில் திருவிழா நடந்துள்ளது. அப்போது, சுவாமி ஊர்வலத்தில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நடனமாடி உள்ளனர்.அப்போது மெக்கானிக் மணிகண்டன், நவீன்குமார் ஆகியோர், நடனம் ஆடக் கூடாது எனக்கூறி அடித்துள்ளனர்.இந்த முன்விரோதத்தில், இவர்களை வெட்டியதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.விசாரணைக்குப் பின், ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ