உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டியில் மண் சரிந்த இடத்தில் எலும்புக்கூடு கண்டெடுப்பு

கிண்டியில் மண் சரிந்த இடத்தில் எலும்புக்கூடு கண்டெடுப்பு

கிண்டி, சென்னையில் கடந்தாண்டு, டிச., 4ம் தேதி, மழை காரணமாக கிண்டி, மடுவாங்கரை அருகே ஐந்து பர்லாங் சாலையில், பெரிய பள்ளம் விழுந்தது.தனியார் நிறுவனம் அங்கு கட்டுமான பணி மேற்கொண்ட நிலையில், அந்த இடத்தை ஒட்டியுள்ள எரிவாயு நிரப்பும் நிலையத்தின் அறை, கன்டெய்னரில் இயங்கியது. திடீர் பள்ளத்தால், பணியில் இருந்த பங்க் ஊழியர்கள், கட்டுமான பணியில் இருந்தோர் பள்ளத்தில் சிக்கினர். ஐந்து நாள் தேடுதல் பணிக்குப் பின் நரேஷ், 24, ஜெயசீலன், 29, ஆகியோர் மீட்கப்பட்டனர்.இந்த பள்ளத்தில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தீபக் பக்டி, 27, என்பவர் சிக்கியதாக கூறப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் இந்த பள்ளத்தை மூடி சீரமைத்தனர்.தற்போது, பள்ளம் விழுந்த பகுதியில் கட்டுமான பணி மீண்டும் துவங்கிய நிலையில், மனித மண்டை ஓடு, எலும்புக்கூடு கிடைத்தன. தகவலின்படி வந்த கிண்டி போலீசார், அதை ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தீபக் பக்டியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தடயவியல் ஆய்வுக்குப் பின், விபரம் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை