மேலும் செய்திகள்
ஆண்டுக்கு 15,000 பேர் பக்கவாதத்தால் பாதிப்பு
2 hour(s) ago
எருமைகளால் விபத்து லாரி ஏறி வாலிபர் பலி
2 hour(s) ago
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம்: புதிய நிர்வாகிகள் தேர்வு
2 hour(s) ago
செய்திகள் சில வரிகளில்
4 hour(s) ago
அசோக் நகர்:சென்னை மாநகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட,'ஸ்மார்ட் பைக் சைக்கிள்'கள் பயன்படுத்தப்படாமல், குப்பை போல் குவிக்கப்பட்டுள்ளதால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.'சென்னை ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், கடந்த 2019ம் ஆண்டு 'ஸ்மார்ட் பைக்' எனும் 'டிஜிட்டல்' வாடகை சைக்கிள் திட்டம் கொண்டுவரப்பட்டது.சென்னை மாநகராட்சி தனியார் நிறுவனத்துடன் இணைந்து, சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஏற்படுத்தவும் அறிமுகம் செய்யப்பட்டது.இதற்கு, 'மொபைல் போன்' செயலி வாயிலாக, 1 மணி நேரத்திற்கு 6 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது, சைக்கிள் கேட்பாரற்று, சாலையோரங்களில் கிடக்கின்றன.கோடம்பாக்கம் மண்டலத்தில் தி.நகர் அசோக் நகர், கே.கே., நகர் என பல இடங்களில், இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.இப்பகுதிகளில் தற்போது, இந்த திட்டம் தோல்வியடைந்து, பொதுமக்கள் பயன்படுத்தாமல் உள்ளனர்.இதில், அசோக் நகர் நான்காவது அவென்யூவில் உள்ள ஸ்மார்ட் பைக் ஸ்டாண்டில், சைக்கிள்கள் பயன்படுத்தப்படாமல் குப்பை போல் குவிக்கப்பட்டுள்ளன.எனவே, இத்திட்டத்தை மீண்டும் பொலிவுபெற செய்ய, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
4 hour(s) ago