உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேகத்தடை, பள்ளம் தடுமாறும் வாகனங்கள் 

வேகத்தடை, பள்ளம் தடுமாறும் வாகனங்கள் 

பட்டாபிராமில் மேம்பாலப் பணி நடப்பதால், அனைத்து வாகனங்களும், பட்டாபிராம் -- பூந்தமல்லி பிரதான சாலை வழியாக சென்று வருகிறது. இச்சாலையில், தண்டரை, ஜெயராம் ரெட்டி தெரு அருகே உள்ள வேகத்தடையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழையால், நாளுக்குநாள் பள்ளம் பெரிதாகி வருகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.இதேபோல், அணைகட்டுச்சேரி பள்ளத்து கோவில் அருகே உள்ள வேகத்தடையிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. 'மெகா' பள்ளமாகும் முன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நிர்மல், பட்டாபிராம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி