உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்ரீ சைதன்யா மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை

ஸ்ரீ சைதன்யா மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை

சென்னை, 'நீட்' நுழைவுத் தேர்வில், ஸ்ரீ சைதன்யா நிறுவனத்தில் படித்த ஒன்பது பேர், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.ஸ்ரீசைதன்யா குழுமத்தின் அகாடமிக் பிரிவு இயக்குனர் சுஷ்மா போப்பனா கூறியதாவது:இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வில், அகில இந்திய அளவில், 720க்கு 720 மதிப்பெண் பெற்ற மாணவர்களில் ஒன்பது பேர் ஸ்ரீ சைதன்யா நிறுவனத்தில் படித்தவர்கள். கல்யாண், பவன்குமார் ரெட்டி, முகேஷ் சவுத்ரி, பனுதேஜா சாய், ராம் க்வாஸி, தர்ஷ் பக்தர், இஷா கோத்தாரி, ஆதர்ஷ் சிங் மோயல், ஆமினா ஆரிப் கடிவாலா ஆகியோர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும், 30 மாணவர்கள் 715 மதிப்பெண்ணும், 57 மாணவர்கள் 701 மதிப்பெண்ணும், 132 மாணவர்கள் 700க்கு அதிகமாகவும் மதிப்பெண் பெற்றுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 27 சதவீதம் பேர், ஸ்ரீசைதன்யாவில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த நீட் தேர்வை எழுதவுள்ள மற்ற மாணவர்களுக்கு இது உந்துசக்தியாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை