| ADDED : ஏப் 29, 2024 01:14 AM
கோயம்பேடு:கோயம்பேடு சந்தையில் துாங்க இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஒருவரை கத்தியால் குத்தியை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயராஜன், 32. இவர், கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து கொண்டு, அங்குள்ள நடைபாதையில் துாங்குவது வாடிக்கை.நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு, விஜயராஜன் துாங்குவதற்காக பார்த்த இடத்தில், இவரைப் போல சந்தையில் கூலி வேலை செய்யும் குமார், 46, என்பவர் துாங்கச் சென்றுள்ளார்.இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், விஜயராஜன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, குமாரின் முகத்தில் குத்தியுள்ளார்.இதில் காயம்அடைந்த குமாரை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார், விஜய ராஜனை கைது செய்து விசாரிக்கின்றனர்.