உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் குழாய்க்கு தோண்டிய பள்ளம் 3 மாதங்களாக சீர் செய்யாததால் அவதி

கழிவுநீர் குழாய்க்கு தோண்டிய பள்ளம் 3 மாதங்களாக சீர் செய்யாததால் அவதி

கோடம்பாக்கம், குடிநீர் வாரியம் சார்பில் கழிவுநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம், மூன்று மாதங்களாக சீர் செய்யப்படாததால், பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கோடம்பாக்கம் மண்டலம், 132வது வார்டு நாகார்ஜுனா நகர் இரண்டாவது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள பாதாள சாக்கடை குழாய், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. இந்த குழாய் சேதமடைந்து, அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, புது கழிவுநீர் குழாய் அமைக்கப்பட்டது.ஆனால், பணிகள் முடிந்தும் சாலை முறையாக சீர் செய்யப்படவில்லை. இதையடுத்து, இரண்டு மாதங்களுக்கு முன் அப்பள்ளத்தில் ஜல்லி கொட்டப்பட்டது.பின், பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், சாலை குறுகலாகி வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பள்ளத்தில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள், தடுமாறி விழும் நிலை உள்ளது.அத்துடன், இச்சாலையில் இருந்து துாசி பறப்பதால், குடியிருப்புவாசிகள் தங்கள் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களை திறக்க முடியாத நிலை உள்ளது.எனவே, இரண்டு மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீர் செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ