உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டேபிள் டென்னிஸ் டிக்கெட் விற்பனை

டேபிள் டென்னிஸ் டிக்கெட் விற்பனை

சென்னை, :'இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் - 2024' போட்டிகள், சென்னை, பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில், வரும் 22ல் துவங்கி, செப்., 7 வரை நடக்கிறது.மொத்தம் 17 நாட்கள், 23 டைகளுடன், எட்டு அணிகள் பங்கேற்கும் லீக் ஆட்டங்களாக நடக்க உள்ளன.இதில், நட்சத்திர வீரர், வீராங்கனையரான ஷரத் கமல், மனிகா பத்ரா, பெர்னாடெட் ஸ்ஸாக்ஸ், குவாட்ரி அருணா, ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஆட்டத்தைக் காண ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், ஆட்டத்தைக் காண்பதற்கான டிக்கெட் விற்பனை, 'புக் மை ஷோ' செயலியில் துவங்கியுள்ளது.போட்டி நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, நேரு உள் விளையாட்டரங்கின் முதல் வாயிலில் உள்ள பாக்ஸ் ஆபிசிலும் நேரடியாக டிக்கெட்டுகளை வாங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை