உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோமாவில் இருந்து மீண்ட வாலிபர் மீண்டும் நடந்த பைக் விபத்தில் பலி

கோமாவில் இருந்து மீண்ட வாலிபர் மீண்டும் நடந்த பைக் விபத்தில் பலி

சென்னை, திருவொற்றியூர், தியாகராயபுரத்தை சேர்ந்தவர் அப்துல் சஜித், 19. ஓராண்டுக்கு முன் தன் நண்பர்களுடன் பைக்கில் சென்ற அப்துல் சஜித், விபத்தில் சிக்கினார். இதில், கோமா நிலைக்கு சென்றார். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்துல் சஜித், ஆறு மாதங்களுக்கு முன் குணமடைந்து வீடு திரும்பினார்.தற்போது பள்ளி படிப்பை முடித்து கல்லுாரி சேர்ந்துள்ள அப்துல் சஜித், கல்லுாரிக்கு செல்ல பைக் வாங்கி தருமாறு பெற்றோரிடம் வற்புறுத்திஉள்ளார். அவர் விருப்பத்திற்கு ஏற்ப, 10 நாட்களுக்கு முன் புதிய பைக்கை வாங்கி கொடுத்தனர். அதற்கு பதிவு எண் கூட வழங்கப்படவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எண்ணுார் விரைவு சாலை, சுதந்திரபுரம் பகுதியில் அப்துல் சஜித் சென்ற மோட்டார் சைக்கிள், தடுப்பு சுவரில் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்து அப்துல் சஜித் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அப்துல் சஜித், நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ