உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புளூ ஸ்கை லீக் கம் நாக் - அவுட் ஹாக்கிஸ் கிளப் அணி அபாரம்

புளூ ஸ்கை லீக் கம் நாக் - அவுட் ஹாக்கிஸ் கிளப் அணி அபாரம்

சென்னை,புளூ ஸ்கை 'லீக் கம் நாக் - அவுட்' கிரிக்கெட் போட்டியில், ஹாக்கிஸ் கிளப் அணி, 169 ரன்கள் வித்தியாசத்தில், எட்வர்டு லெவன்ஸ் அணியை தோற்கடித்தது.சென்னையில், 'தி புளூ ஸ்கை' கிரிக்கெட் அகாடமி சார்பில், புளூ ஸ்கை லீக் கம் நாக் - அவுட் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.இதில் ஒன்பது அணிகள் பங்கேற்று, ஒவ்வொரு அணியும் தலா எட்டு போட்டிகள் வீதம், 'லீக் கம் நாக் - அவுட்' முறையில் மோதி வருகின்றன.சமீபத்தில், சேத்துப்பட்டு எம்.எம்.சி.சி., பள்ளியில் நடந்த 'லீக்' போட்டியில், ஹாக்கிஸ் கிளப் மற்றும் எட்வர்டு லெவன்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற ஹாக்கிஸ் கிளப் அணி, முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 25 ஓவர்களில், ஏழு விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் அடித்தது.அணியின் வீரர்கள் வெங்கட் 88, மனோஜ் 54, பாரத் 45 ரன்களும் அடித்தனர்.அடுத்து களமிறங்கிய எட்வர்டு லெவன்ஸ் அணி, 17 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 94 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால், 169 ரன்கள் வித்தியாசத்தில் ஹாக்கிஸ் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ