மேலும் செய்திகள்
இன்று கச்சேரி
1 minutes ago
மார்கழி இசை கச்சேரி
1 minutes ago
இன்று இனிதாக ... (24.12.2025) சென்னை
2 minutes ago
வினாடி - வினா போட்டி
23 hour(s) ago
திருவொற்றியூர், திருவொற்றியூர், சுங்கச்சாவடி - எர்ணாவூர், பாரதியார் நகர் வரையிலான, 5 கி.மீ., துாரத்தில், என்.டி.ஓ., குப்பம், திருச்சினாங்குப்பம், ஒண்டிக்குப்பம், எல்லையம்மன் கோவில். திருவொற்றியூர் குப்பம், மஸ்தான் கோவில், கே.வி.கே., குப்பம், பாரதியார் நகர் ஆகிய பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. எண்ணுார் செல்வோர், மறுமார்க்கமாக பிராட்வே, எழும்பூர் செல்வோர் இந்த நிறுத்தங்களையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மாநகர பேருந்துகள் பிரதான சாலையில் நின்று செல்வதால், மக்கள் வெயிலில் காத்துக்கிடக்க வேண்டிய சூழல் இருந்தது.தீர்வாக, மாமன்ற கவுன்சிலர்கள் நிதியில், ஆங்காங்கே பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அமைக்கப்பட்ட நிழற்குடைகள் அணுகுசாலையோரம் அமைக்கப்பட்டுள்ளன.மாநகர பேருந்துகள், பிரதான சாலையில் நின்று செல்கின்றன. இது போன்ற வேளைகளில், நிழற்குடையில் இருந்து, பேருந்திற்கு ஓடி ஏற முயற்சிக்கும் பயணியர், அணுகுசாலையில் வரும் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 minutes ago
1 minutes ago
2 minutes ago
23 hour(s) ago