பழுது பார்க்க விட்ட கார் மாயம்
புழல், புழல் சூரப்பேடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ், 32; தனியார் ஒப்பந்ததாரராக உள்ளார். தன் மனைவி பெயரில் மாதவரம் ரிங் ரோட்டில் உள்ள விற்பனையகத்தில்டாடா நெக்ஸான் காரை வாங்கிஉள்ளார்.அடிக்கடி பழுதானதால், சர்வீஸ் நிலையத்தில் சில முறை பழுது நீக்கி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.மீண்டும் காரில் பழுது ஏற்பட்டு, மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள எப்.பி.எல்., டாடா கார் சர்வீஸ் சென்டரில், இம்மாதம் முதல் வாரத்தில் காரை பழுது நீக்க விட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் காரின் நிலை குறித்து கேட்ட போது, காரை காணவில்லை என, நிறுவன மேலாளர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ், இது குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்த மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சம்பவ இடத்தின் அருகில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.