உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மோதி மாணவர் பலி ரிசல்ட் வரும் முன் விபரீதம்

லாரி மோதி மாணவர் பலி ரிசல்ட் வரும் முன் விபரீதம்

மதுரவாயல், சென்னை, மதுரவாயல் தனலட்சுமி நகரில் வசித்து வந்தவர் ஜீவா, 15. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். நேற்று காலை பைக்கில், அருகில் வசிக்கும் தாத்தாவிற்கு உணவு எடுத்துச் சென்றார்.மதுரவாயல் பாலத்தின் கீழே சென்ற போது, லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ஜீவா, படுகாயமடைந்து அங்கேயே பலியானார். தகவலின்படி வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஜீவாவின் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். தப்பிச் சென்ற ஓட்டுனர் சீனிவாசன், 42, மதுரவாயல் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

NicoleThomson
மே 11, 2024 06:32

சிறுவனிடம் பைக்கை கொடுத்த அந்த சிறுவனின் தாய் தந்தையை கைது செய்ய காணோம்


Mani . V
மே 11, 2024 06:26

பதினைந்து வயது பையன் பைக் ஓட்ட அனுமதி உண்டா? ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டிய பச்சிளம் குழந்தை தவறுதலாக லாரி மீது மோதி இருக்கலாமே? இதில் லாரி ஓட்டுனரின் தவறு எங்கு வந்தது?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை