உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெட்ட வெளிச்சமான தி.மு.க., கோஷ்டி பூசல்

வெட்ட வெளிச்சமான தி.மு.க., கோஷ்டி பூசல்

பூந்தமல்லி, திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளராக காங்கிரசின் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இவர், வி.சி., -கம்யூ., - ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை தவிர்த்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், நாசர், சுதர்சனம், கோவிந்தராஜன் ஆகியோருடன், நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார்.மனு தாக்கல் செய்து வெளியே வந்த அடுத்த சில வினாடிகளில், கூட்டணி கட்சியினர் தங்களது சொந்த காரில் சட்டென பறந்தனர்.வேட்புமனு முடித்த கையோடு, காங்., வேட்பாளர் அறிமுக கூட்டம் பூந்தமல்லியில் நடந்தது. அதில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்திற்கு, பூந்தமல்லி ஒன்றியக் குழு தலைவர் ஜெயகுமார் வந்தார். இவர், கட்சியை மீறிய நடவடிக்கையில் ஈடுபட்டதால், சில ஆண்டுகளாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருந்தார். எனினும், தலைமை அறிவுறுத்தலின்படி கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார்.ஆனால், அப்பகுதி தி.மு.க.,வினர், ஜெயகுமார் மேடையில் அமரக்கூடாது என்பதற்காக, அவருக்காக நாற்காலியை போடவில்லை. அவர், சக கட்சியினருடன் அமர்ந்து, கூட்டம் முடிந்ததும் புறப்பட்டுச் சென்றார்.திருவள்ளூர் லோக்சபா தொகுதி தி.மு.க.,வினர், காங்.,குடன் மட்டுமின்றி, சொந்த கட்சிக்குள்ளே கோஷ்டி பூசல் செய்வது, இந்த சம்பவங்களால் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி