உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தையும் குதித்து தற்கொலை

3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தையும் குதித்து தற்கொலை

போரூர், போரூர் ஏரியின் குறுக்கே செல்லும் தாம்பரம் - மதுரவாயல் பை பாஸ் மேம்பாலத்தில், பைக்கில் சென்ற நபர், திடீரென தான் அழைத்து வந்த 3 வயது குழந்தையை ஏரியில் வீசி விட்டு தப்பி சென்றார்.அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ஏரியில் குழந்தையை வீசிவிட்டு சென்றவர், தலைமை செயலக காலணியை சேர்ந்த மோகன்ராஜ், 35, என்பது தெரியவந்தது. மனைவி பிரியாவுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில், 3 வயது மகனை கோபத்தில் ஏரியில் வீசியுள்ளார். இதையடுத்து, தாயிடம் சிறுவனை ஒப்படைத்த போலீசார், மோகன்ராஜை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று போரூர் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த போது, குழந்தையை ஏரியில் வீசி சென்ற மோகன்ராஜ் என்பது அடையாளம் காணப்பட்டது. குழந்தையை ஏரியில் வீசிய மன உளைச்சலில், அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி