உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜாமினில் வந்த அர்ச்சகர் மீது தொகுப்பாளினி அடுத்த புகார்

ஜாமினில் வந்த அர்ச்சகர் மீது தொகுப்பாளினி அடுத்த புகார்

மதுரவாயல்,கோவையைச் சேர்ந்த 30 வயது பெண், சென்னை சாலிகிராமத்தில் தங்கி, தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிகிறார்.இவர், பாரிமுனை தம்புச்செட்டி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது, இரு மாதங்களுக்கு முன், பாலியல் புகார் அளித்தார்.மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும், அதில் தெரிவித்திருந்தார். விருகம்பாக்கம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர், நிபந்தனை ஜாமினில், சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.இந்நிலையில், அவர் மீது தொகுப்பாளினி மீண்டும் ஒரு புகாரை, விருகம்பாக்கம் போலீசில் நேற்று அளித்தார்.அதன் விபரம்:நீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு சனிக்கிழமையும் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கையெழுத்திட வேண்டும். ஆனால் அவர், கையெழுத்திடாமல் ஐந்து நாட்களாக தலைமறைவாகி உள்ளார். அவர் சிறைக்கு செல்லும் முன், என்னை வெட்டி கொல்வதாக தெரிவித்தார். இந்நிலையில் தலைமறைவான அவரிடம் இருந்து மிரட்டல் வருகிறது.என் உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. காவல் துறை, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ