உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பயணியிடம் போன் திருடியவர் கைது

பயணியிடம் போன் திருடியவர் கைது

சென்னை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரைச் சேர்ந்தவர் ரங்கராஜன், 36. இவர், 24ம் தேதி இரவு சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தார்.அப்போது பேருந்து ஏதும் இல்லாததால், அங்கேயே படுத்து உறங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திருட்டு போனது தெரிய வந்தது.இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர்.இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன், 39, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், மூன்று மொபைல் போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி