உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுகாதாரமற்ற இடமாக மாறிய மெரினா கால்நடைகள், பெருச்சாளிகளால் தொல்லை

சுகாதாரமற்ற இடமாக மாறிய மெரினா கால்நடைகள், பெருச்சாளிகளால் தொல்லை

சென்னை:உலகிலேயே இரண்டாவது நீளமான மெரினா கடற்கரையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க தவறுவதாக மாநகராட்சி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மெரினா கடற்கரையை பொறுத்தவரை ஏராளமான சிற்றுண்டி, 'பாஸ்ட் புட்' கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற எண்ணெயில் தயார் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.அவர்கள் மீதமுள்ள உணவுகளை கண்டமேனிக்கு வீசி செல்கின்றனர். அதேபோல கடற்கரைக்கு வருவோர் தின்பண்டங்களை பூங்காவில் இஷ்டத்திற்கு வீசி செல்வதால், எலிகள், பெருச்சாளிகள், நாய்கள் அதிகரித்து விட்டன. மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சாலையோர பூங்காக்களில், பெருச்சாளிகள் வளைகள் தோண்டி நாசமாக்கி உள்ளன. இதற்கு முன், மாதத்திற்கு ஒருமுறை மெரினா பூங்கா முழுதும் உள்ள பொந்துகளில் பொறி வைத்து, எலிகளை பிடிப்பர். ஆனால், தற்போது அந்த நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் மேற்கொள்ளாததால், பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.அதேபோல, சுற்றுவட்டார பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளும் மெரினா கடற்கரையில் புகுந்து, செடி, கொடிகளை கபளீகரம் செய்வது, வாடிக்கையாக நடந்து வருகிறது. தற்போது பூங்காவை தொடர்ந்து தலைவர்கள்சமாதிகள் பின்புறம், மாடுகளை கூட்டம் கூட்டமாக மாட்டின் உரிமையாளர்கள் மேயவிட்டு வருகின்றனர். சிறுவர்கள் பூங்கா பகுதி மற்றும் மணற்பரப்புகளில் சாணம் போடுவதால் சுற்றுலா வருவோரை முகம் சுளிக்க வைக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை