உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை விதிமீறல் வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்த போலீசார்

சாலை விதிமீறல் வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்த போலீசார்

நுங்கம்பாக்கம், இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிய இளைஞர்களை நுங்கம்பாக்கம் போலீசார் எச்சரித்ததுடன், 100 திருக்குறளை எழுதும் தண்டனையை விதித்தனர்.நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சட்டம் - ஒழுங்கு போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த மூன்று இருசக்கர வாகனங்களை போலீசார் மடக்கினர். வாகனங்களை அதிவேகமாக ஓட்டிவந்த, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த, சாலமன், 19, காமேஷ்வரன், 19, ராகுல், 18 ஆகிய மூவரை எச்சரித்த போலீசார், 100 திருக்குறளை எழுத வைத்து, நுாதன தண்டனை கொடுத்து அனுப்பினர். இந்த விவகாரம் போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரியின் கவனத்திற்கு சென்றது. அவரது உத்தரவின்படி, நுங்கம்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் மூவருக்கும் தலா 1,000 ரூபாய் அபராதம்விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி