உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபர் தவறவிட்ட பர்ஸ் மீட்டு ஒப்படைத்த போலீசார்

வாலிபர் தவறவிட்ட பர்ஸ் மீட்டு ஒப்படைத்த போலீசார்

போரூர், போரூர் போக்குவரத்து போலீசார், மவுன்ட் -- பூந்தமல்லி சாலையில் நேற்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, போரூர் முகவலிவாக்கம் அருகே, சாலையில் கிடந்த மணிபர்சை, போலீசார் மீட்டனர்.அதை திறந்து பார்த்த போது, வெளிநாட்டு பணம் மற்றும் இந்திய ரூபாய் 4,000 மற்றும் கிரெடிட் கார்டுகள் இருந்தன. அதில் இருந்த ஆவணங்களை வைத்து பார்த்த போது, பர்சை தவற விட்டவர், போரூர் அன்னை வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த ஹரிஷ் மோகன் என, தெரிந்தது. இதையடுத்து, அவரை நேரில் வரவழைத்து, மணிபர்சை ஒப்படைத்தனர். விசாரணையில், ஹரிஷ் மோகன் ஜப்பான் நாட்டில் இருந்து, நேற்று முன்தினம் தமிழகம் வந்துள்ளார்.விமான நிலையத்தில் இருந்து காரில் வந்த போது, ஓட்டுனருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, மற்றொரு காரில் மாறிச் செல்ல முயன்ற போது, மணிபர்ஸ் தவற விட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ