காசிமேடு,காசிமேடு, திடீர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் தேசிங்கு, 47; பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில், பல்வேறு வழக்குகள் உள்ளன.இவர், நேற்று மாலை காசிமேடு, சூரியநாராயண சாலை அருகே நின்றபோது, திடீரென வந்த மூவர் கும்பல், தேசிங்கிடம் தகராறில் ஈடுபட்டது. பின் மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரது தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி தப்பியது.இதில் பலத்த காயம் அடைந்த தேசிங்கு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதில், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், 27, அக்கேஷ், 27, கோபி, 30, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.இவர்களுக்கும், தேசிங்கிற்கும் இடையே, கடந்த 2022ல் முன்விரோதம் ஏற்பட்டு மோதல் உருவானது. போலீசார் நால்வர் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர். நால்வரும் ஒரே ஏரியா என்பதால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தேசிங்கு, மூவருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதையடுத்து, மூவர் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.