உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எண்ணுார் விரைவு சாலையில் பயன்பாட்டிற்கு வந்தது சிக்னல்

எண்ணுார் விரைவு சாலையில் பயன்பாட்டிற்கு வந்தது சிக்னல்

திருவொற்றியூர்:திருவொற்றியூர், சுங்கச்சாவடி - பாரதியார் நகர் வரையிலான 5 கி.மீ., எண்ணுார் விரைவு சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மாதவரம், மணலி, மணலிபுதுநகர், மீஞ்சூர், விச்சூர் போன்ற பகுதிகளில் இருந்து, கன்டெய்னர் பெட்டக முனையங்களில் இருந்து, சென்னை துறைமுகம் நோக்கி செல்லும், கன்டெய்னர், டிரெய்லர் லாரிகளுக்கும் இச்சாலை பிரதானம். இந்நிலையில், இந்த 5 கி.மீ., துார இடைவெளியில், கே.வி.கே., குப்பம், மஸ்தான் கோவில், பெரியார் நகர், திருவொற்றியூர் குப்பம், கிளிஜோசியம் நகர்.மேலும், கல்யாணி செட்டி நகர், எல்லையம்மன் கோவில் சந்திப்பு, ஒண்டிக்குப்பம், திருச்சினாங்குப்பம், என்.டி.ஓ., குப்பம், தியாகராயபுரம் போன்ற ஊர்கள் உள்ளன. கடைவீதி, பள்ளி, கல்லுாரி உட்பட அத்தியாவசிய தேவைக்காக, இப்பகுதி மக்கள் எண்ணுார் விரைவு சாலையை கடந்து செல்ல வேண்டியிருந்தது.அதுபோன்ற சமயங்களில், கனரக வாகனங்களில் நடைபாதசாரிகள் சிக்கி, உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. இதற்கு தீர்வாக, வேகத்தடை, இரும்பு தடுப்புகள், சிக்னல்கள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில், எண்ணுார் விரைவு சாலை, திருவொற்றியூர் குப்பம் மற்றும் பட்டினத்தார் சுடுகாடு சந்திப்புகளில், வாகனங்கள் முறையாக நின்று செல்லவும், பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்கும் வகையிலும், சிக்னல்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு, வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்